ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் பணியில் ரோபோ; சிறுவன் 100 அடிக்கும் கீழே சென்று விட்டதாக தகவல்
அண்ணா பல்கலைக்கழக குழுவினர் அனுப்பிய ரோபோ குழந்தையின் கைகளைப் பற்றிக் கொண்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னதாக அனுப்பப்பட்ட ஹைட்ராலிக் கருவி சுஜித்தின் ஒரு கையை கட்டியுள்ள நிலையில் அண்ணா பல்கலைக்கழக குழுவினர் அனுப்பிய ரோபோவின் இறுக பிடிக்கும் கருவி தற்போது சுஜித்தின் இன்னொரு கையை பற்றி பிடித்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாக உள்ளது.
அடுத்தகட்டமாக சுஜித்தை மேலே கொண்டு வரும் முயற்சியில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் குழந்தையை மீட்கும் நடவடிக்கை தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் மழை மெதுவாக பெய்ய ஆரம்பித்துள்ளதாகவும், மழை நீர் உள்ளே செல்லாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குழந்தை தற்போதும் பாதுகாப்பாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கித் தவிக்கும் குழந்தை சுர்ஜித், 100 அடிக்கும் கீழே சென்றுவிட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குழந்தை சிக்கியுள்ள ஆழ்துளைக்கிணறு 600 அடி ஆழமுள்ளதாகும். இதனிடையே 26 மணி நேரத்தை கடந்து, தொடர்ந்து மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.
ஆழ்துளை கிணற்றின் அருகே குழி அமைக்கப்பட்டு பக்கவாட்டில் சுரங்கம் அமைத்து குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில் குழந்தைக்காக தமிழகம் முழுவதும் மக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.

Post a Comment