Header Ads

நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூட உத்தரவு

2020 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுமாறு மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.


அதனடிப்படையில் 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆம் திகதி இந்த நடவடிக்கை அமுலில் இருக்கும்.

குறித்த உத்தரவை மீறுபவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பொது மக்களின் முறைபாடுகளுக்காக 1913 என்ற இலக்கம் 24 மணித்தியாலங்களும் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
Powered by Blogger.