Header Ads

இறுதிப் பேரில் களமிறங்க தயார் நிலையில் ரணில்

தனது ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை பாதுகாப்பதற்கான கடைசி முயற்சியாக ரணில் விக்ரமசிங்க செயற்குழு வாக்கெடுப்புக்குத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.


UNP பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் சஜித் பிரேமதாசவுக்கு தெளிவான பெரும்பான்மை இருந்தாலும், கட்சியின் செயற்குழுவின் பெரும்பான்மை இதுவரை இருப்பது ரணில் விக்கிரமசிங்கவுக்கு சாதகமான முறையிலாகும்.

இதற்கமைய செயற்குழுவின் பெரும்பான்மையைக் காண்பிப்பதற்காக வஜிர அபேவர்தன உள்ளிட்ட இருவர் அதன் உறுப்பினர்களோடு கலந்துரையாடுவதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எவ்வாறாயினும் இறுதியாக நடைபெற்ற பாராளுமன்ற குழு கூட்டத்தில் ஏற்பட்ட நிலைமைக்கு அமைய ரணில் விக்ரமசிங்கவுக்கு செயற்குழுவில் உள்ள அதிகாரம் மாறக்கூடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
Powered by Blogger.