Header Ads

தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாதாம்

தோட்டத் தொழிலாளர்களுக்கு தினம் சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்க முடியாது என்பதுடன் அந்த சம்பள அதிகரிப்பை நடைமுறைப்படுத்துவதை தவிர்க்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுப்பதாக இலங்கை ஊழியர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.


உத்தேச சம்பள அதிகரிப்பை பிரதேச தோட்ட சங்கங்களுக்கு கட்டாயமாக்குவது இலங்கையின் சட்டத்திற்கு முரணானது என்பதுடன் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 98ஆவது இணக்கப்பாட்டில் கூறப்பட்டு கூட்டு பேரம் பேசும் சித்தாந்தங்களுக்கு முரணானது என சம்மேளனத்தின் பணிப்பாளர் கனிஷ்க வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் பிரதேச தோட்ட நிறுவனங்கள் இந்த கூட்டு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.

இந்த உடன்படிக்கை 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை நடைமுறையில் இருக்கும் என இலங்கை ஊழியர் சம்மேளனத்தின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
Powered by Blogger.