தனது பிடிவாதத்தால் வௌிநாடுகளிடமும் கேவலப்படும் ரணில்
தலைமைப் பதவியை தான்தான் தொடர்ந்து வைத்திருக்க வேண்டுமென, ரணில் பிடிவாதம் பிடிக்கும் நிலையில், அது ஐதேக ஆதரவாளர்களிடம் மாத்திரமில்லாது, இலங்கை அரசியலில் செல்வாக்குச் செலுத்தும், கொழும்பிலுள்ள தூதுவர்களிடத்திலும் ரணிலின் போக்கு விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
கட்சியின் மூத்த உறுப்பினர்களிடம் அவர்கள், தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஐரோப்பிய தூதுவர்களுடனும், மேற்கு வெளிநாடுகளுடனும் சிநேகமாக உறவை கொண்டிருந்த ரணில், தனது பிடிவாதப் போக்கினால் தமது செல்வாக்கை இழந்து நிற்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Post a Comment