Header Ads

மேஜர் அஜித் பிரசன்னவுக்கு விளக்கமறியல்

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் அஜித் பிரசன்னவுக்கு எதிர்வரும் பெப்ரவரி 07 ஆம் திகதி வரை விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.


அஜித் பிரசன்னவை இன்றைய தினம் கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜராகுமாறு நேற்றைய தினம் அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

முன்னாள் நீதிவான் திலிண கமகேவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் வழக்கு ஒன்று தொடர்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்ததன் ஊடாக நீதிமன்றத்திற்கு அவமதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக அவருக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந் நிலையிலேயே இன்றைய தினம் அஜித் பிரசன்ன நீதிமன்றில் ஆஜராகியபோது அவருக்கு பெப்ரவரி 07 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.