சிங்கள பௌத்தர்களை மறந்து அரசியல் நடத்த இயலாது
இலங்கையை சிங்கள பௌத்த நாடாக ஏற்க விரும்பாத அனைத்து நபர்களையும் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அந்த நபர்களை கட்சியில் இருந்து நீக்கி UNPயை சிங்கள பௌத்த கட்சியாக மாற்ற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு SLECCஇல் நடைபெற்ற UNP உள்ளூராட்சி பிரதிநிதிகள் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில் வேறு அரசியல் கட்சியுடன் டீல் செய்த நபர்களின் அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் கட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
UNPயை முற்றிலும் மாற்ற வேண்டும் எனவும், அதற்காக புதிய தலைமைத்துவத்தின் கீழ் புதிய வேலைத்திட்டத்தைத் தொடங்க வேண்டும் என்றும், சிங்கள பௌத்தர்களை மறந்து அரசியல் நடத்த இயலாது என இப்போதாவது UNP தலைவர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

Post a Comment