கொரோனா.. சஜித் கூறிய மருந்து தவறானது.. சமூகத்துக்கு சஜித் தவறான செய்தியை வழங்குகிறார்
முன்னாள் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்திருந்த காணொளியில் கொரோனா நோயாளர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்படும் மருந்து தொடர்பில் பாரிய குற்றச்செய்தி சமூகத்திற்கு பரப்பப்பட்டு வருவதாக பேராசிரியர் ஜன்ன ஜயசுமன அவரின் முகப்புத்தகம் வாயிலாக சஜித் பிரேமதாசவிற்கு அறிவித்துள்ளார்.
அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு வழங்கப்படும் மருந்து தொடர்பில் தவறான செய்தி மக்களுக்கு அளிக்கப்பட்டு வருவதாகவும் அதனை திருத்துமாறு பேராசிரியரான தாமும் கேட்டுக்கொள்வதாக அவர் அறிவித்துள்ளார்.
ப்ளேக்னில் (Plaquenil) என்ற மருந்தானது ஹைட்ரோகுளோரோகுவின் மருந்தினை விட சிறந்தது எனவும் அதனை தொற்றாளர்களுக்கு பெற்றுக்கொடுக்குமாறும் சஜித் பிரேமதாச தனது காணொளி பதிவேற்றத்தில் தெரிவித்திருந்தார்.
ஆனால் ஹைட்ரோகுளோரோகுவின் என்ற மருந்திற்கு, அந்த மருந்தினை தயாரித்துள்ள நிறுவனம் வழங்கியுள்ள மற்றுமொரு பெயரே ப்ளேக்னில் (Plaquenil) எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment