அடுத்த ஆண்டில் ஜனாதிபதியின் ஒருநாள் செலவுக்காக 02 கோடி; ஜேவிபி வௌியிட்டுள்ள தகவல்
அடுத்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களுக்காகவும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்ளப்பட்ட இடைக்கால கணக்கு அறிக்கையில் ஜனாதிபதியின் செலவுக்காக மாத்திரம் 240 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜேவிபி கூறியுள்ளது.
அதன்படி ஜனாதிபதிக்காக மாத்திரம் ஒரு நாளைக்கு 02 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அந்தக் கட்சியின் பிரச்சாரச் செயலாளர் விஜத ஹேரத் இதனைக் கூறியுள்ளார்.
அதிக வரிச் சுமை, கடன் சுமை அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவுகளை மக்கள் மீது சுமத்தியுள்ள நிலையில் ஒரு நபருக்காக மாத்திரம் 02 கோடி ரூபா ஒதுக்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.
Post a Comment