Header Ads

வீட்டுக்கு வந்து மனைவியை பகிடி செய்த நண்பனை வாளால் வெட்டிய நண்பன்



தனது நண்பனை அரிவாள் கொண்டு தாக்கிய நபர் ஒருவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நண்பர்கள் இருவருக்கிடையில் இடம்பெற்ற வாக்கு வாதத்தின் விலைவாக இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.

தாக்கப்பட்ட நண்பர் தனது மதிய உணவின் பின்னர் வெற்றிலை வாங்குவதற்காக நண்பரின் வீட்டிற்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வீட்டில் உள்ள நண்பரின் மனைவியை குறித்த நபர் பகிடி செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்தே இருவருக்கிடையில் மோதல் ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஹிங்குராங்கொட காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Powered by Blogger.