நாட்டு மக்கள் தொலைபேசி உரையாடல்கள் ஒத்துக் கேட்கப்படுகின்றன
இன்று நாட்டு மக்கள் தொலைபேசியின் ஊடாக மேற்கொள்கின்ற அனைத்து உரையாடல்களையும் அரசாங்கம் ஒத்துக் கேட்டுக் கொண்டிருப்பதாக அசாத் சாலி கூறியுள்ளார்.
அதேநேரம் மக்கள் செல்கின்ற அனைத்து பயணங்களுக்கு பின்னாலும் இரகசியப் பொலிஸாரை அனுப்பி உளவுபார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அன்று முகம் மறைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும், இன்று கொரோனா வைரஸ் காரணமாக முழு இலங்கை மக்களுக்கும் முகத்தை மறைக்குமாறு கூறியுள்ளதாகவும் அசாத் சாலி கூறினார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

Post a Comment