Header Ads

விடுதலைப் புலிகளின் ஆவணங்களுடன் ஒருவர் கைது

கிளிநொச்சி விவேகானந்த நகர் கிழக்கில் உள்ள வீடொன்றில் இருந்து விடுதலைப் புலிகளின் ஆவணங்களுடன் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


கிளிநொச்சி இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கிளிநொச்சி விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் இணைந்து தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது விடுதலைப் புலிகளின் இருபத்தொன்பது ஆவணங்கள் மற்றும் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட ஐந்து ரப்பர் முத்திரைகள், ஒரு மெமரிக் காட், ஒரு பென்டிரைவ் ஆகியவற்றுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட நபர் அதே பகுதியைச் சேர்ந்த 37 வயதானவர் எனத் தெரியவருகின்றது.

கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம், கரைச்சி பிரதேச செயலாளர் த. முகுந்தன், கே.உதயராஜா வவுனியா பிரதேச செயலாளர், வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழு, இராணுவ புலானாய்வுத்துறை ஆகியோரின் போலி இறப்பர் முத்திரையும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர் மற்றும் சான்றுப் பொருட்களையும் விசேட அதிரடிப்படையினர் கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் பாரப்படுத்தியுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Powered by Blogger.