Header Ads

சஜித்தின் புதிய கட்சியின் பெயரும் UNP யா? - பெயரால் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு சஜித் விளக்கம்

சமகி ஜாதிக பலவேகய எனும் பெயரில் பதிவு செய்ய  தயாராக இருப்பதாக தனக்கு அறியக்கிடைத்துள்ளதாகவும், அதன் ஆங்கில பெயர் United National Power என்பதை சுருக்கி UNP என பெயர் வருவதால் அது தமது கட்சியின் எதிர்காலத்திற்கு சிக்கலை விளைவிக்கும் என்பதால் அத்தகைய கட்சியை பதிவு செய்ய வேண்டாம் என்று கோரி யூ.என்.பி.யின் சட்ட செயலாளர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பியுள்ள கடிதம் ஒரு ஆதாரமற்ற கடிதம்  என்று சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.


தான் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்த திருத்தங்களின் படி தனது கூட்டணியின் பெயர் "சமகி ஜாதிக பலவேகய" எனவும் அதை ஆணைக்குழு பயன்படுத்துவது SJB எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் அடையாளத்திற்கு தீங்கு விளைவிக்கும் எண்ணம் தனக்கு இல்லை என்று கூறிய அவர் UNP சட்ட ஆலோசகர் இணையத்தில் சில செய்தி கட்டுரைகளின்படி, புதிய கூட்டணியின் பெயரை தவறாக சித்தரித்து கொண்டு  கடிதம் வெளியிடப்பட்டதாக தெரிகிறது என அவர் குறிப்பிட்டிருந்தார்.
Powered by Blogger.