Header Ads

சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபன வௌியீடு பிற்போடப்பட்டது




புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கும் நிகழ்வு நவம்பர் 01 ஆம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இதனைத் தயாரிக்கும் பணி இன்னும் நடைபெறுகின்றன. ஏனைய பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளியிட்டு நிறைவடைந்த பின்னர் சஜித் பிரேமதாச தனது விஞ்ஞாபனத்தை வெளியிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், இம்மாதம் 21 ஆம் திகதி வெளியிடப்பட ஏற்பாடாகியிருந்த தேர்தல் விஞ்ஞாபனம் நவம்பர் 01 ஆம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளதாகவும் வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாகவுள்ள திஸ்ஸ அத்தநாயக்க மேலும் கூறியுள்ளார்.
Powered by Blogger.