சந்திரிகா தலைமையில் சுதந்திர கட்சி தலைமையகம் முற்றுகை?

சுதந்திரக் கட்சி – வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க எடுத்த தீர்மானம் தொடர்பில் கடும் அதிருப்தியடைந்துள்ள சந்திரிகா ,நாடு திரும்பிய கையோடு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் பலரை சந்தித்துப் பேசவுள்ளார்.
அதேசமயம் பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவளிக்க விரும்பாத கட்சி
முக்கியஸ்தர்கள் மற்றும் ஆதரவாளர்களை கொண்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக்
கட்சியின் தலைமையகத்தினை முற்றுகையிட்டு கைப்பற்றவும் யோசனை
செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதற்கிடையில் சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் பாதுகாப்பை
பலப்படுத்துமாறும் உரிய அனுமதியில்லாத எவரையும் உள்ளே அனுமதிக்க
வேண்டாமெனவும் இப்போதைய கட்சித் தலைமையால் உத்தரவிடப்பட்டுள்ளதாக
அறியமுடிகின்றது.
வெளிநாட்டில் இருந்தபோது அவர் பல
ஸ்ரீ.ல.சு.க அமைப்பாளர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கலந்துரையாடிய
நிலையில், மொட்டை ஆதரிக்க ஒப்புக்கொண்ட பல எம்.பி.க்களுடன் கலந்துரையாடல்
நடத்தியுள்ளார்.
இதற்கிடையில் முதலாவது சுற்றிலேயே
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் ஐக்கிய
தேசிய கட்சியில் இணைந்துக்கொள்வதாக தகவல் ஒன்று பரவி வருகிறது.
Post a Comment