Header Ads

தான் ஒரு இனவாதி என்பதை கோட்டா மீண்டும் நிரூபித்துள்ளார்

தான் ஒரு இனவாதி என்பதை மீண்டும் காட்டியுள்ளார் கோத்தபாய என்று வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் சுட்டிக் காட்டினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
எதிர்வரும் பதினாறாம் திகதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் தான் வெற்றி பெற்றால் பதினேழாம் திகதி சிறையில் உள்ள அனைத்து இராணுவத்தினரையும் விடுதலை செய்வதாக இனவாத பேச்சுடன் அனுராதபுரத்தில் தனது பரப்பரையை ஆரம்பித்திருக்கிறார் கோத்தபாய.

பல்லின மக்கள் வாழும் இலங்கை தேசத்தில் ஒரு ஜனாதிபதியானவர் அனைத்து இனங்களையும் சமமாக பார்க்க வேண்டும்.

தமிழர்களின் உரிமைக்காக போராடி அரசியல் கைதிகளாக இருபது வருடங்களுக்கு மேலாக சிறையில் தவிக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை புறக்கணித்து சிங்கள இராணுவத்திற்காக மனமிரங்கி பேசும் கோத்தபாயாவை தமிழ் மக்கள் எவ்வாறு நம்புவது?


கோத்தபாயாவினது வருகை தமிழ் மக்களுக்கு ஆபத்தானதாகவே அமையும்.
சிறையில் உள்ள சிங்கள இராணுவத்தினர் பல சமூக குற்றங்களிலும் ஈடுபட்டுள்ளார்கள் அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறும் கோத்தபாய ஏன் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை பற்றி வாய் திறக்கவில்லை.

இதிலிருந்து தெரிகிறது சிங்கள ஆட்சியாளர்களின் இதயம் இரும்பினால் ஆனதென்று. தமிழ் மக்கள் சுய கௌரவத்துடன் வாழ்வதை அவர்கள் ஒரு போதும் விரும்ப மாட்டார்கள் தமிழ் மக்களை புறக்கணித்து சிங்கள ஆட்சியாளர்களால் ஒருபோதும் தனித்து ஆட்சி அமைத்துவிட முடியாது. அது எவராக இருந்தாலும் சரி.

உங்கள் குறிப்பேடுகளில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள் பிரதான சிங்கள வேட்பாளர்களின் வெற்றிகளை வடக்கு கிழக்கு தமிழ் மக்களே தீர்மானிப்பார்கள்.

இனவாத விஷத்தை உமிழாத ஒருவரையே தமிழ் மக்களும் விரும்புவார்கள் என்று வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் அவர்கள் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.