சுதந்திர கட்சியின் அதிரடி முடிவு - கோட்டாவின் கூட்டங்களை புறக்கனிக்க தீர்மானம்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குகின்ற போதிலும் எதிர்வரும் நாட்களில் அவரது கூட்டங்களில் கலந்து கொள்ளாதிருக்க தீர்மானித்துள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயனும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கீழ்மட்ட ஆதரவாளர்களை இலக்காக கொண்டு கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றிக்கான கூட்டங்கள் மற்றும் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக அவர் மேலும் கூறினார்.
கடந்த நாட்களில் கோட்டாபய ராஜபக்ஷின் மேடையில் ஏறிய ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்கள் ஹூ சத்தமிட்டது மற்றும் கேலி செய்தமையே இந்த தீர்மானத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.

Post a Comment