UNP யில் மீண்டும் வெடித்துள்ள சர்ச்சை; சஜித் வெற்றி பெற்ற உடனே ரணில் பதவி நீக்கப்படுவாரா?
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தேர்தலை வெற்றி கொண்ட உடனேயே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவியில் இருந்து நீக்கிவிட்டு பதிலாக தமது தரப்பு ஒருவரை நியமித்துக் கொள்வதாக இராஜாங்க அமைச்சர் அஜித் பி. பெரேரா கூறியுள்ளதாகவும், இதனால் கட்சியினுள் மிரண்பாடு எழுந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
சஜித் தரப்பின் பிரதான நபராக அறியப்படுகின்ற அஜித் பி. பெரேரா முதலில் தனக்கு நெருக்கமான ஒருவரிடம் இவ்வாறு கூறியுள்ளதுடன், பின்னர் தனை பகிரங்கமாகவும் கூறியுள்ளார்.
இந்த தகவலை அறிந்த உடனே பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது புலனாய்வுப் பிரிவு மூலம் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தியுள்ளதுடன், இது திட்டமிடப்பட்ட முறையில் மேலும் பலரின் ஒத்துழைப்புடன் இடம்பெற்றுக் கொண்டிருப்பதை கண்டறிந்துள்ளார்.
இதனால் வருத்தம் அடைந்துள்ள ரணில் விக்ரமசிங்க சஜித் தரப்பினரின் தேவைப்படி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ள இடமளித்து விட்டு திட்டமிடல் நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது.

Post a Comment