அனுர திஸாநாயக்க உட்பட 400 பேர் சஜித்துடன் இணைந்தனர்
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க முன்னாள் ஜேவிபி உறுப்பினர்கள் குழு முன்வந்துள்ளது.
கொழும்பு பொது நூலக ஆடிட்டோரியத்தில்
நேற்று(22) நடைபெற்ற கூட்டத்தில், முன்னாள் ஜேவிபி உறுப்பினர்கள் சஜித்
பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்தனர்.
இந்த குழுவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
கம்பஹா மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற
உறுப்பினர் அஞ்சான் உம்மன், மற்றும் முன்னாள் வட மத்திய மாகாண எம்.பி அனுர
திஸாநாயக்க, முன்னாள் மேற்கு மாகாண எம்.பி எராஜ் கிருஷாந்த அல்விஸ்
மற்றும் முன்னாள் வடமேற்கு மாகாண எம்.பி சமன் புஷ்பகுமார ஆகியோர் சஜித்
பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர்.
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, அமைச்சர் பாட்டளி சம்பிக ரணவக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.
Post a Comment