50 கோடி மக்கள் எதிர்நோக்கியுள்ள மற்றொரு பாரிய ஆபத்து - ஐநா சபை விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை
கொரோனா தொற்று காரணமாக சர்வதேச ரீதியில் 500 மில்லியன் மக்கள் வறுமையில் பாதிக்கப்படுவதற்கான சாத்தியகூறுகள் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.கடந்த 30 வருடங்களின் பின்னர் முதல் தடவையாக உலக நாடுகள் இவ்வாறானாதொரு இன்னலான நிலையை எதிர்கொண்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளது.
உலக அளவில் சுமார் 60 கோடி மக்கள் ஏழைகளாகும் நிலை ஏற்படும் என்றும், இதனால் 2030- ம் ஆண்டுக்குள் வறுமையை ஒழிக்க வேண்டும் என்ற ஐக்கிய நாடுகள் சபையின் இலக்கை எட்ட முடியாத நிலை ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்டுள்ள மனித இழப்பு மற்றும் பொருளாதார சரிவு குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வு அறிக்கையில் இத்தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா தொற்று முற்றிலுமாக ஒழியும் நேரத்தில் உலகின் மொத்த மக்கள் தொகையில் பாதி பேர் ஏழைகளாக மாறியிருப்பார்கள் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 40 சதவிகிதம் பேர் கிழக்கு ஆசியாவை சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, சர்வதேச நாடுகளின் பொருளாதார நிலைமை குறித்து கலந்துரையாட ஜீ 20 நாடுகளின் தலைவர்களுடன் கலந்துரையாட உலக வங்கி தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் தொடங்கிய வைரஸ் இன்று உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இதனால் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் பொருளாதாரம் ஸ்தம்பித்துள்ளது.
Post a Comment