ஹிரு, தெரண உள்ளிட்ட நான்கு ஊடகங்களுக்கு ஆப்பு வைத்தார் தேஷப்பிரிய
ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார காலத்தில் சட்ட ஒழுங்கை மீறிய ஊடங்களான ஹிரு டீவி, தெரண டீவி, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் சுயாதீன தொலைக்காட்சி ஆகிய ஊடகங்கள் தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேஷப்பிரிய கூறியுள்ளார்.
குறித்த ஊடகங்களுக்கு தேர்தல் முடிவுகள் வழங்கப்பட மாட்டாது என்றும் அவர் கூறியுள்ளார்.
அந்த ஊடகங்கள் எல்லை கடந்து செயற்பட்டுள்ளன, அந்த ஊடக நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Post a Comment