Header Ads

போலி விலாசத்தை வழங்கியுள்ள மருதானை கர்ப்பிணித் தாய்

கொரோனா தொற்றுக்குள்ளாகி பொரளை  தி சொய்சா வைத்தியசாலைக்கு சேர்க்கப்பட்ட பெண் தவறான விலாசத்தை வழங்கியுள்ளதாக சுகாதாரப் பணிப்பாளர் அனில் ஜாசிங்க கூறினார்.


இதுதொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

பின்னர் வைத்தியசாலை ஊழியர்கள் சிரமப்பட்டு அவரின் உண்மை விலாசத்தை அறிந்து கொண்டனர். வைத்தியசாலைகளுக்கு இந்த தொற்றுடன் செல்வோர் தயவுசெய்து உண்மையைக் கூறுங்கள்

.அப்படிச் சொல்லாதபட்சத்தில் தொற்று இருக்கும் இடங்களில் அவை மேலும் பரவலாம். இல்லாத இடங்களில் நாங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டியிருக்கும்.

இந்த பெண்மணியின் குழந்தை வைத்தியசாலையில் இவர் அனுமதிக்கப்படும் சமயத்தில் இறந்திருந்தது. அது குறித்தும் பரிசோதனை நடத்தப்படுகிறது.

சரியான சுகாதார முன்னேற்பாடுகளுடன் தாதியர் நடந்துகொண்டதால் வைத்தியசாலையின் சுகாதார பாதுகாப்பு பாதிக்கப்படவில்லை.

வைத்தியசாலையின் பணிகள் தொடர்ந்தும் பாதிக்கப்படாமல் முன்னெடுக்கப்படுகின்றன என்று சுகாதாரப் பணிப்பாளர் அனில் ஜாசிங்க மேலும் கூறினார்.

No comments

Powered by Blogger.