Header Ads

வடக்கில் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் உடல் கடலில் இருந்து சடலமாக மீட்பு

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் உறுப்பினராக இருந்த ஒருவர் இன்று யாழ்ப்பாணம் பகுதியில் வைத்து சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.


காவல் துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதணை நடவடிக்கைகளின் போதே குறித்த சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபரின் தேசிய அடையாள அட்டை தொலைபேசி என்பன யாழ்ப்பாணம் தொண்டமானாறு பகுதியில் வைத்து மீட்க்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வலிகாமம், கிழக்கு பிரதேச சபை உறுப்பினரான இலங்கநாதன் செந்தூரன் நேற்று காணாமல் போயிருந்தார்.

இதுகுறித்து விசாரணை செய்த வல்வெட்டித்துறை பொலிஸார் சடலத்தை இன்று மீட்டுள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.