Header Ads

மஹிந்தவை விட வயதான சம்பந்தனை அண்ணன் என்றழைக்கும் நாமல் தம்பி



பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இந்த நாட்களில் இருப்பது வடக்கிலாகும். அது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பிரச்சார நடவடிக்கைகளுக்காக சிறு சிறு கூட்டங்களை நடத்துவதற்காக வடக்கு மாகாணத்தில் பல இடங்களுக்கு பயணங்களை மேற்கொண்டு வருகிறார்.

இந்த சிறிய கூட்டங்களுக்கு பாரியளவான ஊடக அனுசரணை கிடைப்பதுடன், அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனை "சம்பந்தன் அண்ணன் (சம்பந்தன் அய்யா)" என்று கிண்டல் செய்கிறார்.

"சம்பந்தன் அண்ணனிடம் பாதைகள் கேட்டால் அவர் உங்களிடம் சுயநிர்ணய உரிமைக்காக காத்திருக்கச் சொல்வார்." " நாங்கள் தான் வடக்கை அபிவிருத்தி செய்தோம்., சம்பந்தன் அண்ணன் உங்களுக்கு என்ன கொடுத்தார்?" என அவர் மீண்டும் மீண்டும் "சம்பந்தன் அண்ணன் " மற்றும் "சம்பந்தன் அண்ணன்" என்று கூறுகிறார்.

ஆர் சம்பந்தன் இலங்கை நாடாளுமன்றத்தின் மிகப் பழைய உறுப்பினர். 1933 இல் பிறந்த இவருக்கு வயது 86. அவர் 1977 முதல் 1983 வரை  நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார். 

மீண்டும் 2001 முதல் தற்போது வரை நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். நாமல்  ராஜபக்ஷ 1986இல் பிறந்தார்.33 வயதான எம்.பி. அவர் சம்பந்தனை விட 53 வயது இளையவர்.நாமலின்  தந்தை சம்பந்தனை விட 12 வயது இளையவர்.

தனது  தந்தை ஜனாதிபதியாக இருந்தபோது, அரசியலுக்கு பெரசூட்  வழியாக வந்த நாமல்  ராஜபக்ஷ, அவரது குடும்ப உறுப்பினர்களைத் தவிர மற்ற அனைவருமே தாழ்ந்தவர்களாக எண்ணுகிறார். அதனாலேயே அவர் சம்பந்தனை கேலியாக எண்ணுகிறார். 

இந்த ஆட்சியின் அதிகாரம் இல்லாமலேயே இவர் இவ்வாறு பேசுவது புதினம் அல்ல. காரணம் இவர்கள் ஆட்சியின் போது ஸ்ரீ.ல.சு.க வின் மூத்த பிரமுகர் ஒருவரை "என்ன அங்கிள் நான் வரும் போது எழும்ப முடியாதா?  என கேட்டவர் தான் இவர். எனவே, அவர்கள் மீண்டும் ஆட்சியமைத்தால் , நாமல் சம்பந்தனை 'அடோ சம்பா' என்று அழைக்கக் கூடிய வாய்ப்பும் உள்ளது.


Powered by Blogger.