Header Ads

அனைத்து துறைகளுக்கும் இளைஞர்களின் தலைமைத்துவம் தேவை




நாட்டின் அனைத்து துறைகளிலும் தற்போது இளைஞர் யுவதிகளின் தலைமைத்துவம் அவசியப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற சம்மேளன கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் தேசிய இளைஞர் மாநாட்டில் இன்று (19) பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்துக்கொண்டார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர்,

'இளைஞர்கள் தமது எதிர்காலத்தைப் பற்றி என்ன நினைக்கின்றனர்? இளைஞர்கள் விரும்பும் எதிர்காலம் அவர்களுக்கு கிடைத்துள்ளதா?

எமக்கு அபிவிருத்தியடைந்த நாடுகளில் வாழ்வே விருப்பம். அதற்காக பல நாடுகள் தொடர்பில் நாம் சிந்திக்கின்றோம்.

அப்படி வாழ விரும்பினால் பொருளாதார மற்றும் சமூக மேம்பாடு ஆகியன அபிவிருத்தியடைய வேண்டும்.

வளர்ச்சியடைந்த நாடுகளில் பின்பற்றப்படும் பொருளாதார முறைமை போன்றதொரு பொருளாதார கொள்கையை கட்டியெழுப்ப பல வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

தற்போது நாட்டில் மோசமடைந்த பொருளாதாரம் ஒன்று இல்லை.

மாணவர்களுக்கு சுமார் 13 ஆண்டுகள் வரை கட்டாய கல்வி அதனுடன் சேர்த்து தொழில் கல்வியையுயும் வழங்க வேண்டும்.

உயர் கல்வி மேம்படுத்தப்பட வேண்டும் நாட்டின் பொருளாதாரத்தை குறைந்த ஊதியத்தில் கட்டியெழுப்ப முடியாது.

சம்பளம் அதிகரிப்பதோடு அறிவும் அதிகரிக்க வேண்டும். நாம் ஒரு போட்டிமிகு புதிய உலகத்தை நோக்கி பயணிக்கின்றோம்.

உட்கட்டமைப்பு திட்டங்கள் பல உள்ளன. அதற்கமைய பல்வேறு துறைகளை முன்னேற்ற இளைஞர்களின் தலைமைத்துவம் அவசியப்படுகின்றது.

எனவே அதற்கான தலைமைத்துவத்தை வழங்க வேண்டியது அவசியமாகும்.

சிறந்த தலைவராக உங்களை உருவாக்க முடியாவிடின் அது குறித்து கதைத்து பிரயோசனம் இல்லை' இவ்வாறு பிரதமர் கூறினார்.
Powered by Blogger.