Header Ads

டக்ளஸின் கூட்டத்தை அதிரடியாக தடுத்து நிறுத்திய அதிகாரிகள்



Image result for douglas devananda family


வவுனியா தாலிக்குளம் பகுதியில் இன்று இடம்பெறவிருந்த ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தேர்தல் பிரசார கூட்டம் தேர்தல் திணைக்களத்தால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த கூட்டத்திற்கு வவுனியா மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் இருந்து சென்ற உத்தியோகத்தர்கள் பிரசார கூட்டத்தினை இடைநிறுத்துமாறு தெரிவித்தனர்.

குறித்த பிரசார கூட்டத்திற்கு தேர்தல் திணைக்களத்திடமிருந்து உரிய முறையில் அனுமதி பெறப்படவில்லை என தெரிவித்தே கூட்டம் இடைநிறுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த கூட்டம் இடைநடுவில் நிறுத்தப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் ஏமாற்றத்துடன் மீண்டும் திரும்பிச்சென்றிருந்தனர். இதனால் சற்று நேரம் குழப்பநிலை ஏற்பட்டிருந்தது.

வேறு ஒரு பிரசார கூட்டத்திற்கு செல்ல இருந்த நிலையில் ஆதரவாளர்கள் விரும்பியமையால் இங்கு வந்து கலந்து கொண்டேன்.

சட்டரீதியான அனுமதி பெறப்படாதமையினால் இந்த கூட்டத்தை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே பிறிதொரு நாள் உங்களை சந்திப்பதாக டக்ளஸ் தேவானந்தா இதன்போது பொதுமக்களிடத்தில் தெரிவித்திருந்தார்
Powered by Blogger.