Header Ads

ஐ.நா தலைமையகம் வார இறுதி நாட்களில் மூடுவதற்கு காரணமாக அமைந்துள்ள இலங்கை




ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் வார இறுதி நாட்களில் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை எதிர்நோக்கியுள்ள நிதி நெருக்கடி காரணமாகவே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக டுவிட்டர் தள செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் வரவு செலவுத்திட்டத்திற்கு இந்த ஆண்டு உங்கள் நாடுகள் பங்களிப்பு செய்துள்ளதா என அந்த டுவிட்டர் தள செய்தியில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

193 நாடுகள் உறுப்புரிமையை பெற்றுக் கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையில், 131 நாடுகளில் 34 நாடுகள் மாத்திரமே தமது முழுமையான தொகையை செலுத்தியுள்ளன.

97 நாடுகள் இன்றும் முழுமையான நிதித் தொகையை செலுத்தவில்லை என ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கின்றது.


முழுமையான நிதித் தொகையை செலுத்தாத நாடுகள் பட்டியலில் இலங்கையும் உள்ளங்குகின்றது.
Powered by Blogger.