சஜித் தலைமையில் பொது தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல் தயார்
சஜித் பிரேமதாசவுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் மற்றும் அடுத்த பொது தேர்தலில் UNPயை வழிநடத்த பூரண அதிகாரங்கள் கிடைக்கப்பெறாவிடின் UNPயில் இருந்து நீங்கி வேறு கட்சி ஒன்றை உருவாக்குவதற்கு சஜித் தரப்பின் தலைவர்கள் அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய இந்த நாட்களில் புதிய கட்சியில் பொது தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல் தயார்படுத்தல் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவின் தோல்விக்கு பிரதான காரணம் UNP தலைவர் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் தொடர்பாக மக்களிடம் உள்ள அதிருப்தியே என சஜித் தரப்பு தெரிவித்துள்ளது.
இறுதியில் அதற்காக இழப்பீடு வழங்க வேண்டியிருப்பது சஜித் பிரேமதாசவுக்கு என அவர்கள் வாதிடுகின்றனர்.
இதுபோன்று மீண்டும் நிகழாமல் தடுக்க, சஜித் பிரேமதாசவுக்கு UNPயின் முழு தலைமை வழங்கப்பட வேண்டும், அல்லது சஜித் UNPயை விட்டு வெளியேறி புதிய கட்சியை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தொடர்ந்தும் UNPயுடன் தங்கியிருப்பதனால் அடுத்த தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு பாதகமான நிலை ஏற்படும் என்பதால் உடனடியாக இறுதி தீர்மானத்தை எடுக்குமாறு சஜித் தரப்பின் தலைவர்கள் சஜித் பிரேமதாசவுக்கு வலியுறுத்தியுள்ளனர்.

Post a Comment