ஜனாதிபதி உட்பட கும்பத்தினரை கொலை செய்ய திட்டம்?
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை கொலை செய்ய திட்டம் தீட்டிய சந்தேகத்தின் பேரில் இளைஞர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக அருண பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த இளைஞர்கள் ஐவரும் நேற்றைய தினம் கட்டுநாயக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் இந்த சதித்திட்டத்தின் போது பெருந்தொகையான பணம் வழங்கப்படும் மற்றும் வெளிநாடு செல்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தி தரப்படும் என்ற உடன்பாடும் இருந்துள்ளதாக தெரியவருகிறது.
சம்பவம் தொடர்பில் வடக்கு, கிழக்கு பகுதிகளை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
முஸ்லிம் மற்றும் தமிழ் இளைஞர்கள் 05 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த பத்திகை செய்தியில் கூறப்பட்டுள்ளது.
வாழைச்சேனையைச் சேர்ந்த முஹம்மது ரிஃப்கான், கிளிநொச்சிய அக்காராயங்குளத்தைச் சேர்ந்த கணேஷலிங்கம் மதன், விஸ்வமடு, தர்மபுரத்தைச் சேர்ந்த வேலு கோனேஷ்வரம், விஸ்வமடு, கல்லாருவைச் சேர்ந்த குணரத்தினம் நகுலேந்திரன், மஸ்கெலியாவைச் சேர்ந்த அரியராஜன் கமலராஜ் ஆகியேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

Post a Comment