Header Ads

ரிஷாத் - ஹக்கீம் மோதல் - காரணம் சஜித்தா?

எதிர்வரும் பொதுத்தேர்தலில் அம்பாறை போட்டியிடுவது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இடையே முறுகல் நிலை தோன்றியுள்ளதாக “சிலுமின” பத்திரிகை தெரிவித்துள்ளது.


ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் , மக்கள் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசிய கட்சி கூட்டணியாக போட்டியிடுவது தொடர்பில் பல கட்ட பேச்சுவார்த்தைகள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இடையே இடம்பெற்ற போதும் அவை இதுவரை வெற்றியளிக்கவில்லை என கூறப்பட்டுள்ளது.

அம்பாறையில் கூட்டாக போட்டியிடும்  யோசனைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இதுவரை இணக்கம் வெளியிடவில்லை எனவும் அக்கட்சி தனித்து அங்கே போட்டியிடும்  எனவும் சிலுமின மேலும் குறிப்பிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ரிஷாதை கூட்டணியில் இணைத்து கொள்வதற்கு சஜித் பிரேமதாச இணக்கம் வெளியிடாமல் இருப்பதே இந்த பிரச்சினைக்கு காரணம் என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கூறியிருப்பதாக குறித்த செய்தியில்  மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.