கொரோனாவை தோற்கடிக்கும் இலங்கை - இன்று கொரோனா தொற்றாளர்கள் எவரும் இல்லை
இன்று (26) பிற்பகல் 4.45 மணி வரையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக எந்தவொரு தொற்றாளரும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி உறுதிப்படுத்தியுள்ளார்.
கொவிட்-19 எதிர்பாரா பரவலை தடுக்கும் மையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் வைத்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அதன்படி இன்று வரையான இறுதி இரண்டு நாட்களிலும் எந்தவொரு கொரோனா தொற்றாளர்களும் இலங்கையில் அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த நால்வர் முழுமையாக குணமடைந்து வெளியேறியுள்ளனர்.
இவர்கள் இன்று முற்பகல் கொழும்பு IDH வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment