நாட்டில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகள் - மக்களே மிக அவதானம்
நாட்டில் பெய்துவரும் கனமழை காரணமாக ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
களனி கங்கை, களு கங்கை, ஜிங் கங்கை மற்றும் அத்தனகலு ஓயா ஆகியவற்றின் நீர்மட்டம் தற்போது அதிகரித்து வருவதாக குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த ஆறுகளுக்கு அருகில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் குறித்த திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை நாட்டில் தொடர்ந்து வரும் அதிக மழையுடனான வானிலைக் காரணமாக 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, மாத்தறை, காலி, மாத்தளை, குருணாகலை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நேற்று விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்தவிடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, காலி மாவட்டத்தின், நாகொட, பத்தேகம, அக்மீமன, எல்பிட்டிய, நியகம மற்றும் போத்தல ஆகியபிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், மாத்தளை மாவவட்டத்தின் உக்குவெல பிரதேச செயலாளர்பிரிவுக்கும் இவ்வாறு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, இரத்தினபுரி மாவட்டத்தின், எஹெலியகொட, குருவிட்ட,கிரியெல்ல, அஹங்கம, கலவான, நிவித்திகல, எலபாத்த, இரத்தினபுரி மற்றும் பெல்மடுல்ல ஆகியபிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இவ்வாறு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், களுத்துறை மாவட்டத்தின், அகலவத்த, பாலிந்த நுவர,புலத்சிங்கல, வலல்லவிட்ட, ஹொரன, இங்கிரிய மற்றும் மதுகம ஆகிய பிரதேசசெயலாளர் பிரிவுகளுக்கும் இவ்வாறு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மாத்தறை மாவட்டத்தின், பிட்டபெத்தர மற்றும் கொடபொலஆகிய பிரதேச செயலாளர் பிரிவுக்கும், கொழும்பு மாவட்டத்தின் சீதாவாக்க பிரதேச செயலாளர் பிரிவுக்கும், கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, யட்டியாந்தோட்ட மற்றும் தெரணியகலை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இவ்வாறு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக , பொதுமக்கள் மற்றும் ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பொதுமக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு இடர் முகாமைத்து மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

Post a Comment