நீரில் அடித்துச் செல்லப்பட்டு ஒருவர் பலி - மண்மேடு விழுந்து ஒருவரை காணவில்லை
கேகாலை, வத்தாராமஹெல பகுதியில் நீரில் இழுத்துச் செல்லப்பட்ட ஒருவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
48 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதேவேளை, வல்தெனிய பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் 65 வயது பெண்ணொருவர் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை பெய்துவரும் கனமழை காரணமாக கேகாலை-அவிசாவளை வீதியின் கொடியாகும்புர பகுதி நீரில் மூழ்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதன் காரணமாக குறித்த வீதியில் இலகு ரக வாகனங்களின் போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாக தடைப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் மேலும் குறிப்பிட்டனர்.

Post a Comment