Header Ads

இதுவரை 588 முறைப்பாடுகள்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 588 முறைப்பாடுகள்
ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 588 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த 08 ஆம் திகதி தொடக்கம் நேற்று (14) வரை குறித்த முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில், தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 565 முறைப்பாடுகளும், வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 6 முறைப்பாடுகளும் மற்றும் 17 வேறு முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நேற்று (14) பிற்பகல் 04.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 75 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.