Header Ads

பொறியியல் பட்டதாரி; உயர்தர வகுப்பு ஆசிரியர்; ஈஸிகேஷ் மூலம் செய்துவந்த பிஸ்னஸ்



ஈஸிகேஷ் முறையில் பணம் பெற்றுக் கொண்டு ஹெரோயின் விற்­ப­னையில் ஈடு­பட்ட  உயர் தர மாணவர்களுக்கு பிரத்­தி­யேக வகுப்பு நடாத்தும் ஆசி­ரியர் ஒரு­வரும் அவ­ரது இளைய சகோ­தரர் ஒரு­வரும் மார­வில  பிர­தே­சத்தில் கைது செய்­யப்­பட்­டுள்ளனர்.

தும்­மோ­தர பிர­தே­சத்தைச் சேர்ந்த  இவர்கள் இரு­வரும் ஹெரோயின் விற்­ப­னையில் ஈடு­பட்­டி­ருந்த போதே இவ்வாறு  கைது செய்­யப்­பட்­ட­தாக மார­வில பொலிஸார் தெரி­வித்­தனர்.

கைது செய்­யப்­படும் போது இரு­வ­ரி­டத்­திலும் 560 மில்லி கிராம் மற்றும் 440 மில்லி கிராம் எடை­யு­டைய ஹெரோயின் கைப்­பற்­றப்­பட்­ட­தாக பொலிஸார் மேலும்  தெரி­வித்­தனர்.

கைது செய்யப்பட்ட பிர­தான சந்­தேக நபர்  மொரட்­டுவை  பல்­க­லைக்­க­ழ­கத்தின்  பொறி­யியல் பட்­ட­தாரி என்­ப­தோடு உயர் தர மாண­வர்­க­ளுக்கு பிரத்­தி­யேக வகுப்­புக்­களை பல இடங்­க­ளிலும் நடத்தி வரு­வபர் என பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும்  தனது இளைய சகோ­த­ரருடன் இணைத்து போதைபொருள் விற்பனையில் ஈடுபட்ட குறித்த நபர், முக்­கிய ஹெரோயின் விற்­ப­னை­யா­ளர்­க­ளி­ட­மி­ருந்து ஹெரோயினை பெற்று அதனை தனது வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு விற்­பனை செய்து ஈஸி கேஷ் மூல­மாகப் பணத்தைப் பெற்று வந்­துள்­ள­மை  தெரியவந்­துள்­ள­தாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் மாரவில பொலிஸார் கைது செய்­யப்­பட்­ட­ இரு சந்தேகநபர்களையும்  மாரவில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.