முன்னாள் LTTE உறுப்பினரின் வீட்டில் பாரியளவில் ஆயுதங்கள்: மனைவி, சகோதரியும் கைது
திருமலையில்
நேற்றிரவு கைதான இளைஞனின் வீட்டிலிருந்து வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள்
மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.
குறித்த முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைியின் அடிப்படையில் இன்று கிளிநொச்சி அம்பாள்
குளத்தில் அமைந்துள்ள கைதானவரின் வீடு சோதனைக்குட்படுத்தப்பட்டது.
குறித்த
வீட்டில் கைதானவரின் மனைவி மற்றும் பிள்ளை தங்கியிருந்தனர்.
கிளிநொச்சி
பொலிசாரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து குறித்த வீட்டை
சோதனைக்கு உட்படுத்தினர்.
குறித்த சோதனை நடவடிக்கையின்போது ரி56
ரக துப்பாகிள் 1, சிறய ரக துப்பாக்கிகள் 3, கைக்குண்டுகள் 5, ரி 57
துப்பாக்கி ரவைகள் 150, சிறிய ரக துப்பாக்கி ரவை 45, லப்ரப் 1, தொலைபேசிகள்
4, எம் கே.எம் ஜி ரவைகள் 6, வெடிப்பு கருவிக்கான வயர்கள், வெடிப்பு
கருவிகள் 4, ஜிபிஎஸ் 1, தானியக்கிகள் உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளதாக
உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து சந்தேகநபரின் மனைவி மற்றும் சகோதரியும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
நிபோஜன்

Post a Comment