முன்னைய ஜனாதிபதிகள் பெற்ற வாக்குகளின் வீதம் - பெரும் எதிர்ப்பார்ப்பில் இம்முறை
2019 இலங்கை ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகள் தற்போது நிறைவடைந்து வாக்கு பெட்டிகள் வாக்கெண்ணும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
இவ்வாறான நிலையில் இன்னும் சிறிது நேரத்தில் வாக்கெண்ணும் நடவடிக்கை ஆரம்பமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இதுவரையான காலப்பகுதியில் ஜனாதிபதியாக பதவிவகித்தவர்கள் பெற்றுக் கொண்ட வாக்கு சதவீதம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் 1982ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்தன 52.91% வாக்குகளையும், 1988இல் ரணசிங்க பிரேமதாச 50.43% வாக்குகளையும் பெற்றுள்ளார்.
அதேவேளை, 1994ஆம் ஆண்டு 62.28% வாக்குகளையும், 1999இல் 51.12% வாக்குகளையும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
அத்துடன் மகிந்த ராஜபக்ச 2005இல் 50.29% வாக்குகளையும், 2010ஆம் ஆண்டில் 57.88% வாக்குகளையும் பெற்றுள்ளார்.
இதேவேளை, 2015ஆம் ஆண்டில் மைத்திரிபால சிறிசேன 51.28% வாக்குகளை பெற்றுள்ளார் என்பதுடன், இம்முறை தெரிவாகவுள்ளவர் எத்தனை சதவீத வாக்குகளை பெறுவார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Post a Comment