தேர்தல்கள் ஆணையாளர் மகிழ்ச்சியில் - சற்றுமுன்னர் வௌியிட்ட அறிவிப்பு
இலங்கையின் அரசியல் வரலாற்றில் வன்முறைகள் குறைந்த தேர்தல் இதுவென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், இறுதி முடிவும் எதிர்வரும் திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு முன்னர் அறிவிக்கப்படும்.
சரியான முடிவுகளை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் பொறுமையாகவே அறிவிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வன்முறைகள் குறைந்த தேர்தல் என்பதில் மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இதுதவிர சில மதத்தலைவர்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவிற்கு பல முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளர்.
நீண்ட கால தேர்தல் நடவடிக்கைகளில் அனுபவத்தைக் கொண்டுள்ள ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில் மதத்தை அரசியலில் இருந்து தூர ஒதுக்கி வைக்குமாறு தாம் அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களிடமும் நாளைய தினம் கோருவதவற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் கூறினார்.
எனினும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை தேர்தல் வெற்றி பேரணி மற்றும் கூட்டங்களை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலுக்கான முதலாவது உத்தியோகபூர்வ முடிவுகள் இன்று நள்ளிரவின் பின்னர் வெளியாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment