தேர்தலுக்கான விருப்பு இலக்கம் வழங்குவதை ஒத்திவைக்க தீர்மானம்
பொதுத்தேர்தலில் வேட்பாளர்களுக்கு விருப்பு இலக்கம் வழங்கும் நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் திங்கட்கிழமை விருப்பு இலக்கம் வழங்க உத்தேசிக்கப்பட்டிருந்தது.
எனினும் இன்று தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேஷப்பிரியவுடன் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் நடந்த சந்திப்பில் பொதுத்தேர்தலை இந்த சூழலில் நடத்துவதற்கு 90 வீதமானோர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கூறினார்.
இதனாலேயே விருப்பு இலக்கம் வழங்குவதும் ஒத்திவைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஜூன் 20ம் திகதி தேர்தலை நடத்தக்கூடிய நிலமை இப்போதைக்கு இல்லை. அனாலும் நிலமைகளை பொறுத்துப் பார்க்க வேண்டும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேஷப்பிரிய இதன்போது கூறியுள்ளார்.
தேர்தல் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனையும் கவனித்து 11ம் திகதியளவில் ஒரு முடிவை எடுக்க முடியும் என்று மஹிந்த தேஷப்பிரிய மேலும் கூறியுள்ளார்.
Post a Comment