கொரோனா கட்டுப்படுத்தப்பட்டாலும் பூஜியம் வரை கட்டுப்படுத்த முடியாது
கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்ட மட்டத்தில் இருந்தாலும் அந்த நோய் பரவல் பூஜ்ஜியமாக்கப்பட்டுள்ளது என்பது அதன் அர்த்தமல்ல என சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இதனால், கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தி, சமூக இடைவெளியை பேணி அன்றாட பணிகளில் ஈடுபடுவதையே தற்போது செய்ய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
உலகில் உருவான ஏனைய தொற்று நோய்களை போன்று கொரோனா வைரஸ் தொற்று நோயும் எதிர்காலத்திலும் தோன்றி மறைந்து சமூகத்திற்குள் இருந்து கொண்டிருக்கும்.
மனிதர்களுக்கு ஏற்படும் ஒரே நோய் கொரோனா அல்ல, மேலும் பல நோய்களை கட்டுப்படுத்தி, மக்களின் இயல்பு வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்கிறோம்.
ஏனைய நோய்கள் குறித்த கவனம் குறைவாக இருக்குமாயின் அதுவும் ஆபத்து. கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அல்லது மூன்றாவது அலை ஏற்படக் கூடும்.
அது ஆரம்பத்தை போன்று கடுமையானதாக இருக்காது எனவும் அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment