Header Ads

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் மற்றொரு கைது - சஹ்ரானுடன் உள்ள தொடர்பு என்ன?

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


சந்தேகநபர் கிழக்கு மாகாணத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளாரென தெரிவிக்கப்படுகிறது.

மூன்று காவற்துறை குழுக்கள் இணைந்து நடத்திய விசாரணைகளின் போது குறித்த சந்தேகத்திற்குரியவர் கிழக்கு மாகாணத்தில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏப்ரல் 21 தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிம்க்கும், நேற்றைய தினம் கைது செய்யப்பட்டவருக்கும் இடையில் உள்ள தொடர்பு குறித்தும் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அதேநேரம், இந்த விசாரணைகளுக்கு அமைய காத்தான்குடி - பாலமுனை பகுதியில் இயங்கி வந்த விடுதி ஒன்றும் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

அங்கு, ஏப்ரல் 21 தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமினால் பெண்களுக்கும் பயிற்சி மற்றும் அடிப்படைவாத பிரசாரம் ஆகியன மேற்கொள்ளப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டிருந்தது.

இந்த நிலையில், குறித்த விடுதியின் தற்போதைய உரிமையாளர் மற்றும் முன்னாள் உரிமையாளர்களிடத்தில் இது தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

No comments

Powered by Blogger.