பொதுப் போக்குவரத்து தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்
இரண்டு வரங்களுக்கு பொது மக்களுக்கு பொது போக்குவரத்து வழங்கப்பட கூடாது என போக்குவரத்து அமைச்சருக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க அறிவுறுத்தியுள்ளார்.
ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும் பொது போக்குவரத்து சேவையானது அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்காக மாத்திரமே வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காணப்படுகின்ற நிலையில் உரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும் பொது மக்கள் அத்தியவசிய தேவைகள் இல்லாமல் வெளியே வர கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் அனுமதிக்கப்பட்டுள்ள அரச ஊழியர்கள் ரயில் மற்றும் பேருந்துகளில் பயணிக்கும் போது முகக் கவசம் அணிதல், ஒரு மீற்றர் தூர இடைவெளி கடைபிடித்தல், வீதிகளில் எச்சில் துப்புவதனை தவிர்த்தல், தும்மும் போது அல்லது இருமலின் போது முகத்தை மூடிக் கொள்ள வேண்டும், பேருந்து மற்றும் ரயில்களில் உள்ள கைப்பிடிகள் பிடிப்பதனை முடிந்தளவு தவிர்த்தல், அப்படி பிடித்தால் உடனடியாக கைகளை கழுவுதல் போன்ற சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Post a Comment