Header Ads

தமது பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவதில்லை - அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுக்கும் கெமுனு

தனியார் பஸ்களை சேவையில் ஈடுபடுத்தப் போவதில்லை என்று இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன கூறியுள்ளார். 


தாம் முன்வைத்த கோரிக்கைக்கு அரசாங்கம் பதில் வழங்காவிட்டால் இந்நடவடிக்கையை மேற்கொள்வதாக அவர் கூறியுள்ளார்.

தமக்கு எரிபொருள் மானியம் வழங்கப்பட வேண்டும் என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.

வழமையை விட குறைந்த அளவான பயணிகளை ஏற்றிக் கொண்டு சேவையில் ஈடுபடும் போது அது தமக்கு நட்டத்தை ஏற்படுத்தும் என்று கெமுனு விஜேரத்ன கூறியுள்ளார்.

ஆகவே நாளை முதல் தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபட வேண்டுமானால் எரிபொருள் மானியம் வழங்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.