Header Ads

வெள்ளைவேன் கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வந்தது கோட்டாவாம்




நாட்டில் வெள்ளைவேன் கலாசாரத்தை கொண்டு வந்தது தற்போதய ஜனாதிபதி வேட்பாளரின் தந்தை என்றும் இந்த வெள்ளை வேன் கலாசாரத்தை முடிவுக்கு கொண்டுவந்தது எங்கள் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ என்றும் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில தெரிவித்துள்ளார்.

நேற்று புதன்கிழமை பூண்டுலோயாவில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியபோதே அவர் இதனை தெரிவித்தார். இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

நான் பாராளுமன்றத்தில் வைத்து அமைச்சர் கயந்த கருனாதிலக்கவிடம் ஒரு கேள்வியை எழுப்பினேன். யுத்தம் முடிவுக்கு கொண்டுவரபட்ட பிறகு மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியில் வெள்ளைவேனில் எத்தனை
பேரை கடத்திசென்றனர் என கூறமுடியுமா என்று கேட்டேன்.

அதற்கு அவர் யாரையும் கடத்தி செல்லவில்லையென பதில் கூறுகிறார்.

அமைச்சர் திகாம்பரத்தின் வேட்பாளருடைய தந்தை ஆரம்பித்து வைத்த வெள்ளை வேன் கலாசாரத்தை முடிவுக்கு கொண்டுவந்தது எமது வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷதான் என்று உதய கம்பன்பில தெரிவித்துள்ளார்.

சதீஷ் குமார்

Powered by Blogger.