Header Ads

சம்மாந்துறை வரலாறும் வாழ்வியலும்


சம்மாந்துறை வரலாறும் வாழ்வியலும் என்ற நூல் வெளியீட்டு நிகழ்வு  புதன்கிழமை (23) மாலை 6 மணிமுதல் 10 மணிவரை சம்மாந்துறை அப்துல் மஜீட் அரங்கில் நடைபெற்றது.

சம்மாந்துறை கிராமத்தின் தொன்மையை எடுத்துக்கூறும் இவ் நூல் பதிப்பானது இக் கிராமத்தின் வளர்ச்சி இதில் பிரதேசத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்வியல் வரலாறு ,அவர்களின் வளர்ச்சி நாகரீகம் ,கலை ,சமயம் ,தொழில் ,கல்வி ஆகியவற்றில் பெற்ற முன்னேற்றம் , முஸ்லிம்களின் பண்டைய வரலாற்றையும் எடுத்து கூறுகின்றது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எம்.எம்.எம்.நாஜிம் அவர்கள் கலந்துகொண்டு சம்மாந்துறை வரலாறும் வாழ்வியலும் என்ற நூலினை வெளியிட்டு வைத்தார்.

விஷேட அதிதிகளாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் .ஹனிபா,பேராசிரியர்கள் ,விரிவுரையாளர்கள், பள்ளிவாசல் தலைவர்கள், ஆலயத் தலைவர்கள்,பிரதேசவாசிகளும் கலந்துகொண்டனர்.
Powered by Blogger.