விமாான நிலையத்தை நெல் களஞ்சியசாலையாக்கிய தீர்மானம் என்னுடையதல்ல
மத்தல சர்வதேச விமான நிலையத்தில் நெல் களஞ்சியப்படுத்துவதற்கு தான் எந்தவித ஆலோசனைகளையும் வழங்கவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில்
தெரிவித்துள்ளார்.
மத்தல சர்வதேச விமான நிலையத்தில் நெல் களஞ்சியப்படுத்தியதில் மோசடி இடம்பெற்றதாக கிடைக்கப் பெற்ற முறைப்பாடு தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைய பிரதமர் இந்த வாக்குமூலத்தை வழங்கியுள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சி வழங்கியுள்ளார்.
நெல் சந்தைப்படுத்தும் சபை மற்றும் சிவில் விமான சேவை நிறுவனம் ஆகிய இரண்டு அரச நிறுவனங்ளுடன் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டுக்கு அமையவே அங்கு நெல்லை களஞ்சியபடுத்தியதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் என்றவகையில் தனக்கு குறித்த தீர்மானத்துடன் எந்தவித தொடர்பும் இல்லை எனவும் அதனை எந்தவகையிலும் பிரதிநிதிதுவப்படுத்தவில்லை எனவும் மாறாக அது அமைச்சரவை உப குழு எடுத்த முடிவு எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந்த ஆணைக்குழுவில் இரண்டாவது முறையாக முன்னிலையாகி சாட்சி வழங்கியுள்ளமைகுறிப்பிடதக்கது.

Post a Comment