கோட்டாவே முன்னிலையில்; சஜித்துக்கு நெருக்கமான அமைச்சர் வௌியிட்ட தகவல்
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம் உள்ளது என்பது தொடர்பில் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
சமகால நிலவரங்களின்படி பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ முன்னிலை வகிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை விட 11 வீத வாக்குகளால் கோத்தபாய முன்னிலையில் உள்ளார்.
எனினும் சஜித் பிரேமதாஸ தனது தேர்தல் நடவடிக்கையின் மூலம் அந்த வீழ்ச்சியை கடந்து வெற்றி பெறுவார். இறுதி இரு வாரங்களில் அதற்கான மாற்றங்கள் ஏற்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சிங்கள தொலைகாட்சியில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 130 இலட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதற்கமைய 11 வீதம் என்றால் சுமார் 15 இலட்ச வாக்குகளாகும்.

Post a Comment