Header Ads

ஈஸ்டர் தாக்குதல் - தமது அணியில் உள்ளவர்களுக்கு தொடர்பிருந்தால் நடவடிக்கை




உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் இருந்து செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் தமது கூட்டணியில் உள்ளவர்கள் தொடர்பு கொண்டுள்ளமை நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கிரிபத்கொடையில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் பரிந்துரைகள் வரவேற்கத்தக்கவை.

இந்த நிலையில் குறித்த பரிந்துரைகளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் ஏன் நிராகரிக்கிறார் என்பதை அவர் வெளிப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

இதேவேளை சரத் பொன்சேகாவை கைது செய்தமை தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் பொதுமக்களிடம் மன்னிப்பைக் கோர வேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
Powered by Blogger.