தேர்தலில் களமிறங்கி 05 இலட்சம் சிங்கள வாக்குகள் பெற்றால் 100 கோடி; அமைச்சர் ஒருவரின் ஒபர்
ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்கினால் 75 கோடி ரூபா வழங்குவதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் பிரபல அமைச்சர் ஒருவர் பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஞானசார தேரர் தேர்தலில் களமிறங்கி 5 லட்சம் வாக்குகளை பெற்றுக் கொண்டால் சஜித் பிரேமதாச இலகுவில் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி கொள்ள முடியும் என்று அந்த அமைச்சர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் கோரிக்கையை ஞானசார தேரர் நிராகரித்ததை அடுத்து பணத் தொகையை நூறு கோடி வரை அமைச்சர் அதிகரித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும் ஞானசார தேரர் அந்த கோரிக்கைகள் எதனையும் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் இதனால் அந்த யோசனை கைவிடப்பட்டு உள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.

Post a Comment