சமந்தாவின் புதிய பிரவேசம்; வெப் தொடரில் அறிமுகமாகிறார்
திரைப்படங்களைக்
காட்டிலும், அதிரடியான, திரில்லரான, சஸ்பென்ஸ் நிறைந்த வெப் தொடர்களில்
நடிக்கவே பல நடிகர்களும், நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
பாலிவுட்டில் ஏற்கனவே பல வெப் தொடர்கள் வெளிவந்திருக்கும் நிலையில், இந்த
வெப் தொடர் காய்ச்சல் தென்னிந்திய திரைப்பட நடிகர், நடிகைகளிடையேயும்
வேகமாக பரவி வருகிறது.
சமீபத்தில் தமிழ்,
தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியான வெப் தொடரான ‘தி பேமிலி
மேன்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது.
இதில் சூர்யா நடிப்பில்
வெளியான ‘அஞ்சான்’ படத்தில் வில்லனாக நடித்த மனோஜ் பாஜ்பயே, பிரியாமணி,
ஷரீப் காஷ்மி, நீரஜ் மாதவ், பவன் சோப்ரா, கிஷோர் குமார் உள்ளிட்ட பலர்
நடித்திருந்தனர்.
Post a Comment